மீடியா துறையில் சாதிக்கவும், சம்பாதிக்கவும், புகழ் பெறவும், ஆர்வமும் திறமையும் மிக்கவர்கள் பங்கேற்பதன் மூலம் கற்றுக்கொண்டு சேர்ந்து வளரலாம் என்ற தத்துவத்தில் துவங்கும் "தமிழ் படைப்பாளர்கள் குழு (TAMIL CREATORS CLUB)" - ல் உறுப்பினராக இணைந்து அவ்வப்போது நடைபெறும் இணைய கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடலில் பங்கேற்று பயன்பெறலாம். (இலவசம்)


நோக்கம்:
தமிழ் இனி மெல்ல சாகுமோ ? என்ற ஐயத்தை பொய்யாக்க !

LCD (LANGUAGE CONTENT DEFICIT)
தமிழ் மக்கள் தொகை மற்றும் இணையத்தில் ஐந்து மடங்கு குறைவாக உள்ள தமிழ் தகவல்களுக்கான விகித இடைவெளியை போக்க,

தமிழில் படைப்பாளிகளை இணைத்து ஒலி, ஒளி மற்றும் உரைமுறைகளில் அதிகபட்ச படைப்புகளை உருவாக்க,

இதன் மூலம் இணையத்தில் தேடும் அனைத்திற்கும் தமிழில் விடை காண, மொத்தத்தில் இணையத்தில் தமிழை வளர்க்க . . .

செயல்பாடுகள்:
உலகமுழுவதுமிருந்து தமிழ் ஊடக ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் உறுப்பினர்களாக உள்ள இந்த குழு மூலம் வாரம்தோறும் ஒரு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் இணைய கருத்தரங்கமும் அதை தொடர்ந்து உறுப்பினர்கள் தெரிந்ததை பகிர்ந்தும் தெரியாததை கற்றுக்கொண்டும் பயன்பெற கலந்துரையாடலும் நடைபெறும்.